பெரியவர்கள் அட்சதை தூவி ஆசிர்வதிப்பதன் தத்துவம் என்ன...?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (13:51 IST)
குறிப்பாக திருமணம், நிச்சயாதார்த்தம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அட்சதை தூவியே பெரியோர்கள் ஆசிர்வதிப்பார்கள். இந்த அட்சதையில் அரிசி, நெய், மஞ்சள் மூன்றும் கலந்து இருக்கும்.


இந்த மூன்றும் கலந்து ஆசிர்வதிப்பதில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால் அரிசி என்பது பூமிக்கு மேல் விளைவது. மஞ்சள் பூமிக்கு வீழ் விளைவது. இவை இரண்டையும் இணைக்கும் பாலமாக பசு நெய் செயல்படுகிறது.

அரிசியும் மஞ்சளும் எப்படி முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்தாலும் பசு நெய்யால் ஒன்றுபடுகிறதோ. அது போல மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் இதுவரை வாழ்ந்திருந்தாலும் திருமண பந்தத்தின் மூலமாக அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் அற்புதமான தத்துவத்தை இது உணர்த்துகிறது.

அட்சதை தட்டிலிருந்து அட்சதை போடுபவர்களுக்கு எடுத்துக் கொடுக்க கூடாது. அவர்கள் கைகளினாலேயே எடுத்து ஆசிர்வதிக்க வேண்டும். அவ்வாறு ஆசிர்வதிக்கும் போது எங்கேயோ ஒரு மூலையில் இருந்து அட்சதையை தூக்கி எறியக் கூடாது. மணமக்களின் அருகில் சென்றே அவர்களை ஆசிர்வதிக்க வேண்டும்.

இதே போல வீட்டில் நடக்கும் அனைத்து விஷேஷங்களிலும் புதுமனை கட்டும்போதும், புதிய தொழில் துவங்கும்போதும், திருமணத்தின் போதும் அட்சதை தூவி ஆசீர்வதிப்பதுண்டு.

பொதுவாக அரிசிக்கு சந்திர சக்தி அதிகம், மஞ்சளுக்கு குருபகவானின் சக்தி அதிகம், பசு நெய்க்கு மகாலட்சுமியின் சக்தி அதிகம். ஆகையால் இவை மூன்றையும் கலந்து ஆசிர்வதிப்பதன் மூலம் ஆசிர்வாதம் பெறுபவரின் வாழ்வு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்