ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட வேண்டிய முறைகள் என்ன...?

Webdunia
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக இருக்கின்றன. ஆடி மாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபட முறைகளையும் காணலாம்.

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள்  செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான்.
 
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன.
 
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
 
ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.
 
ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
 
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்