சனி தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?

Webdunia
ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். 

ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.
 
சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
 
ஒருவரின் ஜாதகத்தில் 71/2 சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும், அம்மனையும் வழிபட்டு பின்னர் சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும். 
 
மேலும் சனியின் பாதிப்புள்ளவர்கள் திருவாதவூர் சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட்ட வர வேண்டும். மேலும் சனி தோஷம் உள்ளவர்கள் அருகிலுள்ள சனீஸ்வரர் ஆலயம் சென்று சனிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர சனி தோஷம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்