இறைவனை அடையும் வழி; திருமூலர் திருமந்திரம்...!

Webdunia
திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது.
 
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும். 
 
திருமூலர் அருளிய திருமந்திரம்:
 
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”
 
இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம். இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும், எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத்தான் பார்கிறார். பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று பார்பதில்லை. 
 
ஒரு கை புல்,ஒரு கை பொரி, அன்போடு படைத்தால் விநாயகர் வசப்படுவார். சில துளசி இலைகளில் மஹா விஷ்ணு வசப்பட்டுவிடுவார். சில துளி கங்கா தீர்த்தம்,வில்வம் இவற்றால் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகிவிடுகிறார். இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்