பல அற்புத ஆற்றல்களை நமது உடலிற்கு தரும் ஓம் என்னும் மந்திரம்...!!

Webdunia
ஓம் என்னும் மந்திரம், ஆ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளால் உருவான அற்புத மந்திரம். இந்த மந்திரத்தில் உள்ள மூன்று ஓசைகளையும் ஒருவர் எழுப்பும்  சமயத்தில் உடலின் கீழ் பகுதி முதல் வயிற்று பகுதி வரை இயக்கம் பெறுகிறது.

‘ஓ’ என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது மார்பு பகுதி சீரான இயக்கத்தை பெறுகிறது. ‘ம்’ என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது நமது மூளை பகுதி  தூண்டப்படுகிறது. அதோடு நமது முகத்தில் உள்ள தசைகளும் நன்கு வேலை செய்கின்றன.
 
ஒருவரது மனதை ஒருமைப்படுத்தி அவரது எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டு செல்லும் அற்புத சக்தி ஓம் என்னும் மந்திரத்திற்கு உள்ளது. இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது உடலின் இயக்கம் சீரடைகிறது. நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல்  பெருகுகிறது.
 
தினமும் காலையில் 10 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வெறும் ஓம் என்ற மந்திரத்தை மட்டும் கூறினாலே போதும் அந்த நாள் முழுக்க நாம் சிறப்பாக  செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலிற்கு தருகிறது.
 
ஓம் என்பதை உச்சரிப்பதில் கூட  ஒரு தாத்பரியம் இருக்கின்றது.  ஓ வின் உச்சரிப்பைக் குறைத்து ம்- இன் உச்சரிப்பை நீட்டித்து  சொல்ல வேண்டும். ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நமது கவனத்தைச்  சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும். 
 
ஆம் மனிதனுக்குள் எப்போதும் தெய்வசக்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும். அசுரசக்தியை வெல்லும் சக்தி ஓம் என்னும் மந்திரத்துக்கு  உண்டு. ஓம் என்னும் ஒலி அதிர்வுக்கு சக்தி வாய்ந்த ஆற்றல்கள் உண்டு என்பதைக் கண்கூடாக உணரலாம்.
 
காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும். ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம். 
 
ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம். பூமி சுற்றும் போது எழும்பும் ஒலி அலைகள். இவை தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றன. நம் உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்