ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு பரிகார விருட்சங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களூம் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில், மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் எண்ணற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும் தெய்வீகத் தனமையும் அளப்பறியது.
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனோடு இணைந்து வாழ்வதாகும். இந்த விருசங்கள் வெளியிடும் காற்றை நாம் சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விரிட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும் சர்வ சித்திகளும் அடையலாம்.