குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவதன் காரணம் என்ன தெரியுமா...!

Webdunia
குருவின் பார்வை எதயும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன்,குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே  ஸ்தம்பித்தது. 
 
அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன்,எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை  தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான்.வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும்  அவனை சோதிக்க விரும்பாத குரு,அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.
இதையும் படியுங்கள்: 

கஷ்டத்திலிருந்து விமோசனம் பெற்ற குபேரன்

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு,கேது, சனி, செவ்வாய், புதன்,சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை,தமது பார்வை பலத்தினால் குறைக்கும்  சக்தி படைத்தவர்.எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்