தடைகளை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் !!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:17 IST)
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். 

குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும். புதன் கிழமை மற்றும் மார்கழி மாத புதன் கிழமையன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் தொடர்ந்து இருந்தால் நல்ல புத்திசாலி ஆக மாற்றி விடும். 
 
விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, மோதகம் கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது.
 
கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவார். இழந்த உத்தியோகத்தையும் பதவியையும் கெளரவத்தையும் பெற்றுத் தருவார் விநாயகர்.
 
நம் சங்கடங்களை தீர்ப்பதால்தானே சங்கடஹரசதுர்த்தி என்கிறோம். நல்லெண்ணெய் காப்பு போடுவதால் நமது துன்பங்கள் தீரும்.
 
பச்சரிசி  மாவு அபிஷேகம் செய்வதால் நாம் கடனாளி ஆகமாட்டோம். வராக்கடன் வசூல் ஆகும்.
 
இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும். பால் அபிஷேகம் தூய்மையையும் தயிர் அபிஷேகம் சாந்தத்தையும் தரும்.
 
கரும்புப்பால் இழந்த செல்வத்தையும் பழச்சாறு அபிஷேகம் 16 வகை ஐஸ்வர்யங்களையும் தரும். அதேபோல பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் திருமஞ்சனம், மஞ்சள், பன்னீர், விபூதி, பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்