கரூர் அருகே புகழிமலையில் தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி

Webdunia
கரூர் அருகே புகழிமலையில் தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம்,  புகழிமலை கோவிலில், தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
கரூர் அடுத்த, வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 15 ம் தேதி அன்று கொடியேற்றத்துடன்  தைப்பூசம் விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும், உற்சவம் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்த நிலையில், தைப்பூச  தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று (21-01-19) மாலை, தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா  என்று முருகன் கோஷங்கள் முழங்க தேரினை வடம்பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
 
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் முருகன், வெள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் பவனி வந்தனர். மேலும் இதனை தொடர்ந்து இன்று (22-01-19) மாலை, 4:45 மணிக்கு மறு தேரோட்டம் வரும், 23ல், குதிரை வாகன மண்டகப்படி, 24ல் கொடியிறக்கம், 25ல் விடையாத்தி ஆகிய நிகழ்ச்சிகள்  நடக்கின்றன. இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், திருக்கோயில் நிருவாகத்தினரும் சிறப்பாக செய்து  வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்