முருகனின் சரவணபவ என்ற மஹாமந்திரத்தின் பொருள் என்ன....?

Webdunia
மு - முகுந்தன் என்கிற விஷ்ணு, ரு - ருத்ரன் என்கிர சிவன், க - கமலத்தில் இதித்த பிரம்மன். ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை  வடிவமானவன்.
ஆறுமுகமான சண்முக தத்துவம்:
 
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு
இரு முகம் - அக்னிக்கு
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு
நான்முகம் - பிரம்மனுக்கு
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு
 
சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம்:
 
ச - லக்ஷ்மிகடாக்ஷம், ர - சரஸ்வதி கடாக்ஷம், வ - போகம், மோக்ஷம், ண - சத்ருஜயம், ப - ம்ருத்யுஜயம், வ - நோயற்ற வாழ்வு. ஆக,  பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
 
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகள்:
 
திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அனாஹதம், திருத்தணிகை - விசுத்தி,  பழமுதிர்சோலை - ஆக்ஞை.
 
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் கந்த சஷ்டியில் துதித்து வழிபடுவது நல்வாழ்வை அமைத்து தரும். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது  இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.
 
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத்  தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே  மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்