இறைவன் எந்தெந்த வடிவங்களில் அருள் செய்கிறான்...!

Webdunia
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள் உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள் செய்கின்றான்.
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது. இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும். உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப்  புலப்படும். இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை. இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும். இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது,  உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் போன்றவை. 
இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு (64) வகையாக உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து வடிவங்கள் மகேசுவர  மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன.
 
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே சிவலிங்கம் எனப்படும். "இலிங்கம்" என்பதற்கு குறி என்பது பொருள். குறி என்றால், ஒரு அடையாளம் ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமே சிவலிங்கம் எனப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்