கரூர்: பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்

Webdunia
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி – பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

 
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயமானது தென்னிந்திய சிவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும், இந்நிலையில் மஹா சிவராத்திரி அன்று தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, இந்த கோயிலின் ஈசனுக்கு முன்பு அமர்ந்து இருக்கும் நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம்,  மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் விஷேச அபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கவசங்கள் கொண்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு  அலங்காரங்கள் செய்யப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, கும்ப ஆரத்திகள் கொண்டு நந்தி எம்பெருமானுக்கு காட்டப்பட்டு பின்னர் மஹா தீபாராதனையும், முன்னதாக ஷோடசம்ஹார முறைகளும் காட்டப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி எம்பெருமானின் நடுவே ஈஸ்வரனை தரிசித்து ஈசன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை  இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்