ஜூன் மாத ராசிபலன்கள் 2023! – துலாம்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (11:12 IST)
கிரகநிலை:



ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு,  குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
01-06-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-06-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தொழில் வித்தைகளை அறிந்து செயல்படும் துலா ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும்.
பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். விளையாடும் போது கவனம் தேவை. பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

சுவாதி:
இந்த மாதம் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 15-06-2023 இரவு 09:52 மணி முதல் 18-06-2023 அதிகாலை 05:44 மணி வரை
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்