ஜூலை மாத ராசிபலன்கள் 2023! – கன்னி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (10:44 IST)
கிரகநிலை:


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு  - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்   என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
02-07-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
03-07-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
15-07-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-07-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து  அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.

கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.

மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

அஸ்தம்:
இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்