ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்! | January 2025 Monthly Horoscope| Rishabam | Taurus Zodiac

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (08:49 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
 
கிரகநிலை:


ராசியில்  குரு (வ) -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  பஞசம  ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில் சனி -  லாப  ஸ்தானத்தில் ராஹூ  என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

01.01.2025  அன்று  புதன்  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.01.2025   அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று தொழில்  ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் தனஸ்தானத்தைப் பார்க்கும் கேதுவால் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள். நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள்.

வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். பெண்களுக்கு புதிய கடனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படும்.

க்ருத்திகை:

இந்த மாதம் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

ரோகினி:

இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:      1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்:            8, 9

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்