மகாளயபட்ச காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்தது ஏன்...?

Webdunia
பூலோகம், தேவலோகம் போல் பித்ரு லோகமும் உண்டு. பூலோகத்தில் வாழ்ந்து இறந்துவிட்ட முன்னோர்கள் பித்ரு லோகத்துக்குச் செல்கிறார்கள் என்றும் அவர்கள் மகாளயபட்ச காலமான பதினைந்து நாட்களும் பூலோகத்துக்கு வருகிறார்கள் என்று விவரிக்கிறது தர்ம சாஸ்திரம்.

மகாளயபட்சம், இந்த பதினைந்து நாளும் தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி இயலாதவர்கள் ஏதேனும் ஒரு நாளிலாவது தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் குறிப்பாக, மகாபரணி என்று சொல்லப்படும் நாளிலும், மகாவியதிபாதம் நாளிலும், கஜச்சாயை நாளிலும் அவசியம் நம்முடைய முன்னோர்களை வணங்கவேண்டும் என்கிறார்கள்.
 
மகாளயபட்சத்தின் முக்கியமான நாளான மகாவியதிபாதம் மிக முக்கியமான நாள். நம் முன்னோர்களை வணங்கக் கூடிய நாள். பொதுவாகவே, இந்த பதினைந்து நாட்களும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும், தர்ப்பணம் செய்யலாம். அதாவது தாய் - தந்தை இல்லாதவர்கள், எவருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.
 
மகாவியதிபாத நாளில், அவசியம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, எள்ளும் தண்ணீரும் விடலாம். இறந்தவர்களின் பெயர்களை சொல்லி, மூன்று முறை சொல்லி எள்ளும் தண்ணீரும் விடலாம். இதனால் முன்னோர்களின் ஆத்மாக்கள் குளிர்ந்து, இதுவரை தர்ப்பணம் செய்யாத தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்