ஆடிக் கிருத்திகையில் கந்தனுக்கு காவடி எடுத்து சிறப்பு வழிபாடு

Webdunia
ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று விரதமிருத்தல் கந்தன் பேரருளைக் பெறலாம். அவ்வாறு இயலவில்லையென்றால், மூன்று கிருத்திகைகள் பெருஞ்சிறப்பு வாய்ந்தவை. அந்நாட்களில் கந்தனைத் தொழுதாலே போதும். அவை உத்தராயணத் துவக்கத்தில் வரும் தைக்கிருத்திகை, தக்ஷிணாயனத் துவக்கத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதத்திலேயே வரும் திருக் கார்த்திகைப் பண்டிகை ஆகியன.
இவற்றுளும் ஆடிக் கிருத்திகை மிகுந்த சிறப்பைப் பெறுகின்றது. இறைவனைத் தொழுவதில் கழிக்க வேண்டிய தக்ஷிணாயண காலத் துவக்கத்தில் இந்நாள் வருகிறது. தாய்க்குச் செல்லப்பிள்ளையான கந்தன் தன் தாயாம் அம்பிகையுகந்த மாதத்தில் தனக்கு விழா எடுத்தால் எத்தனை மகிழ்வான் என்பதைச் சொல்ல  வேண்டியதில்லை.
 
ஆடிக்கிருத்திகையில் உண்ணாநோன்போ, உப்பில்லா உணவு உட்கொள்வது சிறப்பு. மேலும் பால் குடமெடுத்தல், காவடி ஏந்துதல், குன்றுக் கோயில்களில் அவனை வழிபடுதல் என்று இந்நோன்பினைப் பலவிதமாகப் பக்தர்கள் இயற்றுகின்றனர். அந்த சமயங்களில் கந்தனின் புகழ்பாடும் ஸ்தோத்திரங்களைப்  பாராயணம் செய்தல் வேண்டும்.
 
கந்தன் திருத்தலங்களிலெல்லாம் இவ்விழா சிறப்பான பூஜைகளுடன் கொண்டாடப் பெற்றாலும் பழனியிலும், திருத்தணிகையிலும் மிகவும் விசேஷமாக நடத்தப்படுகிறது. இம்முறை ஆடிக்கிருத்திகை 5-8-2018 அன்று வருகிறது. அன்று குமாரனை விசேஷப் பூஜைகளாலும் விரதங்களாலும் ஸ்தோத்திரங்களாலும் திருப்தி செய்து பலன்களை பெறுவோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்