ஆந்தை அலறினால் அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமா என்ன...?

Webdunia
தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர். மேலும் இவை விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது. 

ஆந்தையின் படம் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜாக்களின் அரண்மனையில் ஆந்தையின் படம் கண்டிப்பாக இருக்கும். அதை அதிர்ஷ்டத்தின் உருவமாக வழிபட்டனர்.
 
ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும். இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்று நிச்சயமாக நம்புகின்றனர். 
 
எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வ வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இதுபோல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம்.
 
ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் வேதனை படுவார்கள். ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். 
 
நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்