சகல செல்வங்களையும் அள்ளித்தரும் சொர்ணாம்பிகை வழிபாடு !!

Webdunia
சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சி 16 முகங்களோடு சிவப்பெருமான் காட்சியளித்தார். 


என்ன வரம் வேண்டுமென கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள் என அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு  வேண்டினார். 
 
அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீச்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்றும், சிவனின்  காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர்.
 
இன்றைய தினம் வீடு வாசலை சுத்தப்படுத்தி, கோலமிட்டு, பூஜை அறையில் குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து, அதற்கு புதுத்துணி அணிவித்து வீட்டிலிருக்கும்  நகைகளை பூட்டி அழகுப்படுத்தி, மஞ்சள் பொடியால் கோலமிட்டு, அதன்மீது பச்சரிசி பரப்பி அதன்மீது குத்துவிளக்கை வைத்து அம்பாளாய் ஆவகனப்படுத்த  வேண்டும்.

சிறு பெண் குழந்தைகளை அம்மனாய் பாவித்து வணங்கி சர்க்கரை பொங்கல் அல்லது பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிப்பட்டு சுமங்கலி  பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், சீப்பு, ஜாக்கட் துணி, கண்ணாடி என அவரவர் வசதிக்கேற்ப தானமாய் தரலாம். 
 
சொர்ணாம்பிகையின் மூலமந்திரம். 
வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை !
 
பொருள்: வேதாந்தத்தின் வேரென விளங்கும் வேத பொருளானவளும், அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும், ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும், சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக  என்பதாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்