எந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்...?

Webdunia
வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.
திங்கள்: திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும்  சர்க்கரை படைக்க வேண்டும்.
 
செவ்வாய்: செவ்வாய் கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெரும்.
 
புதன்: புதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. எனவே புதன் கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.
 
வியாழன்: வியாழன் கிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு  உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.
 
வெள்ளி: துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின்  அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.
 
சன: சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி  தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.
 
ஞாயிறு: நவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்