பழனி மலை முருகன் சிலை தனி மகத்துவம் பெற்றது ஏன் தெரியுமா...?

Webdunia
புராதானக் காலத் துவக்கத்தில் இருந்தே சித்தர்களும் முனிவர்களும் பழனி மலை மீது தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் புனிதத்தன்மை அடைந்தது.

தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் ஒப்பிடும் பொழுது அவற்றில் இருந்து பலவற்றிலும் வேறுபட்டு உள்ளது.
 
சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ உருவங்களை கறுங்கல் பாறைகளில் செதுக்குவார்கள். ஆனால் அப்படி இல்லாமல் பழனியில் உள்ள மூலவர்  சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.
 
சமஸ்கிருதத்தில் நவ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நவ என்றால் புதியது அல்லது ஒன்பது என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. அதுபோலவே பாஷம்  என்றால் விஷம் அல்லது தாதுப் பொருட்கள் என்ற இரண்டு அர்த்தம் கொண்டது. 
 
அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதில் இருந்தே சித்த முனிவர் போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல  தொலை தூரக் கண்ணோட்டத்தில் பின்னர் வர உள்ள காலங்களில் தோன்ற இருக்கும் முருக பக்தர்களுடைய உடல் நலனில் அளவுக்கு மீறிய நாட்டம் கொண்டு  இருந்தார் எனவும் மிக உயர்வான தெய்வ நிலையை பெற்று இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.
 
முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசை போல செய்து அதை சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது அற்புதமான வேறொரு மருத்துவ குணம் கொண்டதாக வியாதிகளைத் தீர்க்கும் முறையில் அமைந்து விடுவதினால் அதன் மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோய்களும்  விலகுகின்றன. அதற்கு விஞ்ஞான காரணம் உள்ளது.
 
பழனியில் உள்ள முருகன் சிலையோ மெல்லியதாகவும் மொட்டைத் தலையுடன் மெல்லிய காவி உடை அணிந்தபடியும் சாமியார் போன்ற தோற்றத்திலும் கையில் தண்டாயுதத்தை ஏந்திக் கொண்டும் மேற்கு நோக்கி பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்