மகாளய பட்சம் ஆரம்பமாகும் காலம் எப்போது தெரியுமா....?

Webdunia
இன்று முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆகிறது. வருகின்ற சனிக்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். 


ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் ஸ்வேதாதேவி மூலம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம்  ஒப்படைப்பாராம்.
 
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் இந்த 15நாட்களுக்கு மட்டும் நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். 
 
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில்  வந்திருப்பதாக நம்பிக்கை.
 
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை நம் சங்கதி விருத்தியடைவது  உறுதி.
 
நாம் பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய திதி நாளை விட்டுவிட்டால் இந்தப் புண்ணிய தினத்தில் செய்துவிடலாம். பெற்றோர்கள் ஐம்பூத உடல் எனப்படும் உடலை விட்டு விண்ணுலகம் சென்ற பிறகு பித்ருக்கள், வைவஸ்வசன் ஆதி என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் வசிக்கிறார்கள். 
 
பித்ருக்களுக்கு உற்சவ காலம் என்று கருதப்படுவதால் இந்த தினங்களில் அவரவர் தந்தை, தாய் இறந்த திதியில் எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க  வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்