மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறைத் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளிலும், சாதகமான நட்சத்திரங்களிலும் இந்த மாதம் முழுக்க சென்றுக் கொண்டிருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும்.
உங்களுடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உங்கள் பேச்சிலே ஒரு மிடுக்குத் தெரியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் சகோதரங்கள் குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் முக்கியத்துவத்தையும், உண்மையான பாசத்தையும் உணர்ந்துக் கொள்வார்கள்.
ஜென்மச் சனி தொடர்வதாலும், சூரியன் சாதகமாக இல்லாததாலும் முன்கோபம் அதிகமாகும். வேலைச்சுமையால் டென்ஷன் இருந்துக் கொண்டேயிருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். அவ்வப்போது ஒற்றை தலை வலி, மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு எரிச்சல், ஒருவித பதட்டம் வந்துச் செல்லும். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணத் தடைகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.
கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். குரு சாதகமாக இருப்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால் ராகு 10-ல் நீடிப்பதால் அலைச்சலும், இடமாற்றமும், வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். கலைத்துறையினரே! அதிரடி சலுகையுடன் எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். எதிர்ப்புகளையும் கடந்து முன்னேறும் மாதமிது.