டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - மீனம்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (21:16 IST)
பல சமயங்களில் சாதுவாக இருக்கும் நீங்கள் சண்டையென்று வந்து விட்டால் சட்டம் பேசுவீர்கள். ராசிநாதன் குரு 7-ம் இடத்திலும், நிழல் கிரகமான ராகு 6-ம் வீட்டிலும் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். நாடாளுபவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். 5-ந் தேதி வரை உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள், தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துப் போகும். புதன் சாதகமாக இருப்பதால் கனிவாகப் பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பணப்புழக்கமும் அதிகரிக்கும். வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருக்கும் பழைய நண்பர்கள் உதவுவார்கள். 12-ம் வீட்டில் கேது நிற்பதால் வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.  வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கி கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரே! பிரபலமாவீர்கள். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தொட்டதெல்லாம் துலங்கி வெற்றி பெறும் மாதமிது.
அடுத்த கட்டுரையில்