சிவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன்கள்...?

Webdunia
சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்  தெரிந்து கொள்வோம்.
சிவ அபிஷேகமும் அதன் பலன்களும்:
 
1. அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும். 
2. திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் உண்டாகும். 
3. கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவர். 
4. நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி கிட்டும். 
5. கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.
6. நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம், கோவ்ருத்தி கிட்டும். 
7. மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும். 
8. மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.
9. அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். 
10. நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்