வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (11:14 IST)
சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது. வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம்.


யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த "பஞ்ச தருக்கள்" என்ற சிறப்பைப் பெற்றது.

விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள். அதாவது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது. உதாரணம் விஸ்வ நாதம் எல்லாவற்றிலும் நிறைந்த நாதம்.

வில்வமரம் நெருப்பு அம்சம் (பனி கட்டி) உடையது. இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது.

சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும்போது, சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுரகிரி மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள். இவர்களை வழிபாடு செய்து விட்டு தான் இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள். சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு.  

அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது. முன் நாட்களில் பறித்து கொள்ள வேண்டும்.

வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம். வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்