பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:35 IST)
பங்குனி மாதத்தின் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை, சக்தி சதுர்த்தி என்பார்கள். இது ரொம்ப விசேஷமானது. மிகவும் சக்தி வாய்ந்த நன்னாளாகச் சொல்லப்படுகிறது.


சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சக்தி கணபதி விரத தினமாக கொண்டாடுகிறார்கள்.

இன்றைய தினம் விரதம் இருந்து சக்தியையும்  கணபதியை யும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும்.

சதுர்த்தி திதியில் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி, சிதறுகாய் அடித்து பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கு வந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். நம் சந்தோஷங்கள் பெருகும்.

சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில், ஆலயங்களில்  உள்ள விநாயகருக்கு, சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இதேபோல், பிள்ளையாருக்கு வீட்டில் இருந்தபடியே பூஜைகள் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்