துணிந்தவனுக்கு இந்த உலகம் சொந்தம் -சினோஜ் கட்டுரைகள்

சனி, 25 பிப்ரவரி 2023 (22:14 IST)
இந்த உலகில் பிறந்துவிட்டோம். இனி எப்படியாவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும், வாழாமல் வெறுமனே வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவதில் என்ன இருக்கப் போகிறது.
 
எப்படி வேண்டுமானாலும், இந்த வாழ்க்கையில் வாழ முடியுமென்றாலும், இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ்கின்றவர்களின் வாழ்க்கை தான் மற்றவர்களுக்கு வழிகாட்டுதலாக அமைவதுடம், வரலாற்றுத் தடம் பதித்துச் செல்கிறது.
 
வசதியான வீட்டில் பிறந்திருந்தால் இ ந் நேரம் நான் இதைச் செய்திருப்பேன். அதைச் செய்திருப்பேன் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் கூட நாம் பொன்னான நொடிகளை இழந்திருப்போம்!
 
யார் எங்கே பிறக்கிறார்கள் எங்கு வளர்கிறார்கள், எங்கு வசிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
 
அவர்கள் தங்களின் வாழ் நாளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
 
கடலில் வாழும் திமிங்கலம் ஆற்றில் வாழ வேண்டுமென ஆசைப்பட்டால், என்னாகும்?
பாலைவனக் கப்பலான ஒட்டகத்தைக் கொண்டு வந்து, குளிர்பிரதேசத்தில் விட்டால் என்னாகும்?
 
அணுகுண்டாலும் தகர்க்க முடியாத பீரங்கியைக் கொண்டு வந்து, கடலில் வைத்தால் என்னாகும்?
 
விமானந்த தாங்கிப் போர் கப்பலைக் கொண்டு, அலங்காரத்திற்காக சாலையில் வைத்தால் என்னாகும்?
 
ஆனால், மனிதன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் பூமித்தரையில் வசிக்கும் போதே, கடலுக்குள் நீந்திச் செல்ல முடியும்! ஆகாயத்தில் ஸ்கை டைவிங் அடிக்க முடியும்! துருவப் பிரதேசத்திற்கு சென்று பனிக்கரடிகளைப் புகைப்படம் எடுக்க முடியும்! விண்வெளிக்குச் சென்று, அவன் ஆராய்ச்சிகள் செய்ய முடியும்!
 
இந்த உலகில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் எங்கெங்கு இருக்க வேண்டுமோ அதற்கென்று பிரத்யேகமாகவே படைக்கப்பட்டிருக்கிறது.
 
அதேபோல், பிற பொருட்களும் தேவைக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் இதையெல்லாவற்றையும் ஆளுகை செய்யவும் அதன் வழி அவன் பயன்பெறனும் படைக்கப்பட்டிருக்கிறான்.
 
ஆப்பிரிகாவில் சவான புல்வெளியில் தோன்றிய உலகின் முதல் மனிதனாக இருந்தாலும், அவன் கால் நடையாக நடந்து பல கண்டங்களைத் தாண்டி, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து நாகர்களாக இருந்தாலும், அதன் பின்னர், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் வேகம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கானது.
 
யார் எதைப் படைத்தாலும், ஒரு சிலவற்றைத்தவிர அது உலகின் பார்வைக்கு வந்து அது பயன்பாட்டிற்கும் விற்பனைக்கும் வருகிறது. அது மக்களின் நுகர்வுக்கு வந்துவிடுமானால், போதும் போதும் என்ற வரை அதன் தேவையைப் பொறுதது மேலும் மேலும் அதன் உற்பத்தியும் பெருகிக் கொண்டே போகிறது.
 
ஆனால்,இத்தனை பரிணான வளர்ச்சி அடைந்துள்ள உலகில் வாழும் மனிதர்கள் அத்தனை மனிதர்களுக்குமே, வசதியான வாழ்க்கை என்பது இருக்கிறதா? என்பது கேள்வியாக இருந்தாலும், குறிப்பிட்ட சிலருக்கு வசதியான வாழ்க்கை கிடைக்காமல், வறுமையால் வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட அந்த வாழ்க்கையில் இருந்து மீண்டெழுந்து ஒரு புதிய வாழ்க்கையை அவர்களால் ஏன் உருவாக்க முடியாது.
 
இதற்கான ஆயுதமாகக் கல்வி உள்ளது.
 
இதன் மூலம் நம் எதிர்காலத்தை நாம் ஏன் மாற்ற முடியாது ! வசதியான உள்ளவர்கள் மட்டும் சாதித்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? வசதி வாய்ப்புகள் இருந்து ஒரு சாதிப்பதில் அப்படி என்ன பெருமை இருக்கப்போகிறது! ஆனால், எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் ஒருவன் தானாகவே தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு முன்னேறி தான் நினைத்ததைச் சாதிக்கும்போது, கண்ணன் வாயைத் திறந்து பிரபஞ்சத்தைக் காட்டியது மாதிரி இந்த உலகம் நம்மைக் கண்டு வியக்கும்!
வசதிகள் கொண்டவர்கள் எல்லாம் புத்திசாலிகளும், அல்ல சாதனையாளர்களும் அல்ல.
எல்லாருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அது அவர்களை இயக்கும், ஒருவேளை பணி அழுத்தம், சூழல், குடும்ப நிலை ஆகியவற்றின் காரணமாக அவர்கள் நினைப்பதை நிறைவேற்றாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால், அது குறிப்பிட்ட காலம்தான் என்று தங்களின் கனவை அடைவதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டால் அவர்களால் உலகில் தங்களின் பல நாள் கவனை நிறைவேற்ற முடியும்!
 
வசதியான குடும்பத்தில் பிறந்து, இங்கிலாந்தில் உயர் கல்வி படித்தவரும், இந்திய முன்னாள் பிரதமருமான நேரு, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்தபோதுதான், அவர் தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதம், கிலிம்ப்ஸ் ஆப் வேல்ர்ட் கிஸ்டரி என்ற பெயரில் பின்னாட்களில், உலகம் போற்றும் புத்தகமாக வெளியானது.
 
தான் வசதியான குடும்பத்தில் பிறந்தவராகவே இருந்தாலும், படித்த படிப்பிற்காக தொழிலை விட்டுவிட்டு, விடுதலைக்காகப் போராடியதற்காகச் சிறை தண்டை அளிக்கப்பட்ட வேலையில் நேரு கடிதம் எழுதினார். படித்தார்.
 
அந்த இக்கட்டான நிலையிலும் கூட அவர் புத்தக விரும்பியாகவும், எழுத்தாளராகவும் ஜொலித்தார்.
 
அவர் உலக வரலாற்றிஞர்களைப் போன்று வரலாற்றுவியலாளராக இல்லை. ஆனால், அவர் எழுதிய அப்புத்தகம் உலகைப் பற்றி அறிய விரும்புவோருக்கான குறிப்பேடாக விளங்குகிறது.
 
தமிழில் அப்புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஒவி அளகேசன் மொழிபெயர்த்திருக்கிறார்.
 
அப்புத்தகத்தில் கிமு ஆறாயிரம் ஆண்டு காலத்தில் இருந்து நேருவின் காலம் வரை வரலாறாக எழுதியதே நேருவில் சிறப்பு.
இத்தனைக்கும் எந்தக் குறிப்புகளும், புத்தகளை ஆராய்ச்சிக்காக எடுத்துப் பார்க்க வசதியின்றி தான் படித்த புத்தகங்களை மனதில் அலசிப் பார்த்து அப்புத்தகத்தை எழுதி வரலாற்று ஆசிரியர்களுக்கு நிகரான இடத்தைப் பிடித்தார் ஜவஹர்லால் நேரு.
 
இதேபோல், இருக்கின்ற சூழல் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது! நாமே சூழலை நமக்கேற்றபடி, மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் நம் வரலாற்றை அழுத்தமாகத் தடம் பதிக்க முற்படுவோம்!

ALSO READ: சாதனையாளர்களின் விடாமுயற்சிகள்- சினோஜ் கட்டுரைகள்
 
வானம் மாதிரி இந்த உலகம் எல்லோருக்குமானது! அதில், நாடு, மொழி, சமயம் பார்த்து, இருக்கும் நிலைபார்த்து, வாழ்க்கையைக் கோட்டைவிட வேண்டாம்! வெற்றிக் கோட்டையை யார் வேண்டுமானாலும் கட்ட முடியும்!
 
துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்,
ஏனென்றால் துணிந்தவனுக்கே இந்த உலகம் சொந்தம் !
 
தொடரும்
#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்