மூன்று ஒலிம்பிக், மூன்று தங்கம்: அழியா புகழடைந்த உசைன் போல்ட்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (18:01 IST)
உசைன் போல்ட் ஜமைக்கா ஆண்கள் அணியின் 400 மீட்டர் தொடர் ஓட்ட அணிக்கு தலைமை தாங்கி, போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், மூன்று ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


 

ரியோ ஒலிம்பிக்ஸில் ஜமைக்காவின் தடகளவீரர் உசைன் போல்ட் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியிலும் வென்றுவிட்டார். உசைன் போல்ட்டின் ஜமைக்கா அணி பந்தய தூரத்தை 37.27 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றது.

போல்ட்டை தொடர்ந்து ஜப்பான் அணி 37.60 விநாடிகளில் கடந்து 2ஆவது இடத்தையும், கனடா அணி 37.64 விநாடிகளில் கடந்து 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதன் மூலம் 2008 பெய்ஜிங், 2012 லண்டன் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில், 100மீ, 200மீ மற்றும் 400மீ என மூன்று தடகளப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்