சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...!

Webdunia
பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும்.
* உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடி  கொண்டு இருக்கின்றன.
 
* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக  இன்னொன்றைக் கொடுங்கள்.
 
* நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சுமத்தன்மையை  அடைகிறது.
 
* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும்  மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


 
* எழுந்து தைரியமாக நின்றால், உன் விதியை நீயே நிர்ணயிப்பாய்.
 
* கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், அன்பைக் கொள்ளாமல் பொருளை மட்டும் கொள்ளும் விலைமகள் போன்றவர் ஆவார்.  அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
 
நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை  சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்