நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எப்போது ? – ஸ்டாலின் சூசகப்பதில் !

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (15:01 IST)
சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும் அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் தனபால் அறையில் பதவிப் பிரமானம் செய்துகொண்டனர். இதையடுத்து தமிழகச் சட்டமன்றத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 109 பேர் இருக்கிறார்கள். 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததது. அதுகுறித்து இன்று சட்டமன்றத்துக்கு வெளியே கேள்வி எழுப்பியபோது சட்டசபைக் கூடும்போது இது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்