கடந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வீசுவதாக சொல்லப்பட்ட மோடி அலை இந்த தேர்தலில் அவருக்கு எதிர் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் கடந்த மோடி அறிவித்த கருப்புப் பணம் ஒழித்தல் மற்றும் ஒவ்வொரு இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுதல் போன்ற வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்ற இயலவில்லை.
சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் பிருந்தாகாரத் என்பவர் மோடி பற்றிய கூறிய சம்பவம் ஒன்றில் ‘வட இந்தியாவில் “மோடி ஒரு கூட்டத்தில் பெண்களிடம் “ உங்கள் தேவை என்ன ?என்று கேட்டதற்கு . அவர்கள் தங்கள் கிராமத்தில் ”மருத்துவரே இல்லை”ன்னு சொல்லவும் உடனே மோடி செல்போனில் ஏதோ பேசிவிட்டு ”உங்கள் கிராமத்திற்கு மருத்துவரை ஏற்பாடு செய்துவிட்டேன். வேறு என்ன வேண்டும்.?”ன்னு கேட்டதுக்கு. “எங்கள் கிராமத்தில் எந்த போனுக்கும் சிக்னலே கிடைக்க மாட்டேங்குது”ன்னு சொன்னாங்களாம்.’ எனத் தெரிவித்தார்.