திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் வழக்கு தொடர உரிமையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:58 IST)
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஜோசப் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதை அடுத்து தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
 
அதுமட்டுமின்றி கலைச்செல்வி கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்