கோவையில் பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகல்

Sinoj
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (16:58 IST)
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா., பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
 
சமீபத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ் நாட்டிற்கு வந்துள்ள நிலையில், பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
 
கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 
 
இந்த நிலையில், கோவையில் பாஜக  கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது.
 
இதுகுறித்து பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளதாவது; கோவையில் பாஜக தலைவர்கள் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை. எனவே கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மெளனமாய் வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் நெருங்கியுள்ள சம்பவத்தில் இரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்