நீங்களும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்: நீதிபதியை மிரட்டிய யுவராஜ்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (01:55 IST)
கடந்த 2012ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்படுள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவாராஜ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சில முக்கிய தகவல்களை பதிவு செய்ய தனக்கு ஐந்து நிமிடம் ஒதுக்குமாறு நீதிபதியிடம் யுவராஜ் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதி அளிக்கவில்லை

இதனால் ஆவேசமான யுவராஜ், இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க நேரிட்டால் நீங்களும் சிறை செல்ல வேண்டிய நிலை வரும் என்று கூறினார்

இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி, யுவராஜை உடனே நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய யுவராஜ், இந்த வழக்கின் நீதிபதி முக்கிய ஆவணங்களை மறைக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்