சென்னை அண்ணா சாலையில் சாகசம் செய்த இளைஞர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (11:01 IST)
சென்னை அண்ணா சாலையில் சாகசம் செய்த இளைஞர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை அண்ணா சாலையில் சாகசம் செய்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இன்று காலை சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் திடீரென ஒருவர் இளைஞர் படுவேகமாக ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கினார். சாலையில் வளைந்து வளைந்து இருசக்கர வாகனத்தில் லீவிங் செய்த அந்த இளைஞர் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தினார்
 
சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை அந்த இளைஞர் செய்த சாகசம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்