மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி, சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் மகன் சூர்யா (22). இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சூர்யா சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிறை சென்று கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
சூர்யாவை கொலை செய்ய முயன்றது.
இதனை சற்றும் எதிர்பாராத சூர்யா இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
ஆனால் விடாமல் துரத்திய அந்த கும்பல் சூர்யாவை வீட்டின் அருகே தலை, உடல்களில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.