அப்போது பேசிய சிம்பு, ”தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் எப்படி நம்மீது கை வைப்பார்கள் என்று பார்ப்போம். தேசிய கொடி நம் மேல் இருந்தால் அவர்களால் அடிக்க முடியுமா?” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தாக்க வந்தனர். உடனே அவர், தனது உடலில் தேசியக்கொடியை அணிந்துள்ளார். ஆனால், அவரையும் காவலர்கள் கொடுமையாக தாக்கி உள்ளனர். தேசியக்கொடியை பயன்படுத்தியும் தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.