அந்த வாலிபர் தனது பைக்கை திருப்பி தருமாறு காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர். மேலும், இப்போது பைக்கை தர முடியாது. காலையில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு பைக்கை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் திடீரென்று கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அந்த வாலிபரை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.