தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

செவ்வாய், 1 மார்ச் 2022 (12:23 IST)
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக வரும் 3 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 3, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்