மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொடுக்கான்பட்டி கிராமத்தில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவிலில் சில தினங்களாக திருவிழா நடைபெற்றது. இக்கோவில்திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு நாடகம் நடைபெற்றது.இந்த நாடகத்தை ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.
இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அண்டை ஊரான கோவில்பட்டியில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் ராம்பு (வயது 23), என்பவரும் அவரது நண்பர்கள் தங்கையா (30), சுபாஷ் (19), திவாகர் (25) ஆகியோர் சென்றுள்ளனர்.