தலையில் கல்லை போட்டு பெண் கொடூர கொலை

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:00 IST)
கரூர் அருகே நச்சலூரில் தலையில் கல்லை போட்டு ஒரு பெண் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளார்.


 

 
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, நச்சலூர் கட்டானிமேடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கர் இவரது மனைவி மஞ்சுளா(30) கூலி தொழிலாளியான இவர். தனது கணவர் ரெங்கர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.
 
இந்நிலையில்  மஞ்சுளாவிற்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது அவர்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். இன்று காலை நச்சலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு அருகில் வாரிக்கரை களத்தில் தலையில் கல்லைபோட்டு மஞ்சுளா கொலையுண்டு கிடப்பதாக குளித்தலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்ததையடுத்து கொலைக்கான காரணத்தை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 
மஞ்சுளாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் 30 வயதான இந்த பெண்மணிக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையிலும், கணவர் இறந்து 7 மாதங்கள் ஆன நிலையில் ஏதேனும் கள்ளத்தொடர்பு உள்ளதா என்றும், மேலும் தகாத உறவிற்கு யாரேனும் அழைத்து கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் குளித்தலை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த கொடூர கொலை சம்பவம் கரூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பையும், அப்பகுதியில் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்