ஓசியில் ’அது ’ கேட்டு ரவுசு : பெண்ணுக்கு சரமாரி கத்திக் குத்து

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (11:37 IST)
சென்னை  காசிமேடு இந்திரா நகரில் வசித்து வந்தவர் சத்யா. போலிஸுகு தெரியாமல் திருட்டுத்தனமாக மது விற்று வந்துள்ளதாக தெரிகிறது. 
இவருடம் ஒசியில் மதுகேட்டு வந்துள்ளார் பிரபல  ரவுடி ஸ்ரீதர் (42). அதற்கு சத்யா தான் மது விற்பதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறு ஆனதாக தெரிகிறது.
 
அந்த சமயத்தில் எதிர் வீட்டில் வசிக்கும் பெண் மல்லிகா (35)என்பவர் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.  இவர் தான் சத்யா மதுவிற்பதை போலீஸுக்கு தகவல் தெரிவித்து அவரது வியாபாரத்தை நிறுத்தியதாகத் தெரிந்து கொண்ட ஸ்ரீதர் தான் கையில்  வைத்திருந்த கத்தியால் மல்லிகாவசி சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
 
வலியால் அலறிய மல்லிகாவை உடனடியாக மீட்டு சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் போலிஸார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்