சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.
குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்ததார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக அமலாக்கத்துறை வாதிட்டது.