மாவட்ட துணைச் செயலாளர் ஆவாரா துணைமேயர்?

வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:25 IST)
தி.மு.க மாவட்டச்செயலாளர்கள் தேர்தல் சூடுபிடித்துள்ளநிலையில் பலரும் பல்வேறு வகைகளில் காய்நகர்த்தி வருகின்றனர்.
தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதே தஞ்சாவூர் மாவட்டம். 
 
தஞ்சாவூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திருவையாறு எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன் மீண்டும் தஞ்சாவூர் மத்திய மாவட்டத்திற்கு செயலாளராகும் முயற்சியில் இருக்கிறார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் வாயப்புகிடைக்காமலும் உள்ளாட்சித்தேர்தலில் தலைமை மேயர் பதவி தருவதாக சொல்லி கடைசி நேரத்தில் துணைமேயராக ஆக்கப்பட்டவருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி மாவட்ட துணைச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்கிறார். 
 
தற்போதைய தஞ்சாவூர் மேயர் சண்.இராமநாதனுக்குப் பரிந்துரை செய்து மாநகரச்செயலாளர் ஆக்கி இளைஞருக்கு வாய்ப்பளித்த  மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் தனக்கும் பரிந்துரை செய்வார் என அஞ்சுகம் பூபதி நம்புகிறார். 
 
மேயர் பதவி கைநழுவிய போது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவதாக தலைமை சொன்ன வாக்குறுதியும், தலைமையின் ஆதரவும், அவர்கள் குடும்பத்தினர் ஆதரவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவும்  இருப்பதால்  மாவட்ட துணைச் செயலாளர் பதவி கிடைத்துவிடும் என்று அஞ்சுகம் பூபதியின் ஆதரவாளர்கள் நினைக்கின்றனர்.
 
Source: நெடுஞ்செழியன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்