இந்த நிலையில், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் விதமாகவும், கம்பெனியை இழுத்து மூடி விடுவதாகவும், ஊழியர்களின் கை, கால்களை உடைத்தது விடுவதாகவும் தகராத வார்த்தைகளால் பேசினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தனியார் நிறுவன சி இ ஓ கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.