மு.க.ஸ்டாலின் கவனம் பள்ளப்பட்டி நகர திமுக மீது விழுமா ? பிளக்ஸ்களால் மக்கள் அவதி

புதன், 21 செப்டம்பர் 2022 (23:07 IST)
மு.க.ஸ்டாலின் கவனம் பள்ளப்பட்டி நகர திமுக மீது விழுமா ? மீண்டும் தலைதூக்கும் பிளக்ஸ் கலாச்சாரம் ? இரண்டு மாதங்களாகியும் இன்னும் எடுக்காத பிளக்ஸ்களால் மக்கள் அவதி.
 
கடந்த அதிமுக ஆட்சியின் போது பிளக்ஸ் கலாச்சாரம் தலைதூக்கியதாக அன்றைய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் பிளக்ஸ் கலாச்சாரம் கூடவே கூடாது என்று தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் உத்திரவு பிறப்பித்தும் கரூர் மாவட்ட அளவில் மு.க.ஸ்டாலின் போட்ட உத்திரவினையும் மாறி, மாறி திமுக வினரே மீறி வருகின்றனர். 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி, தற்போது தான் இந்த ஆட்சியில் திராவிட ரோல் மாடல் ஆட்சியில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியுள்ளது. இந்நிலையில், பள்ளப்பட்டி நகர திமுக சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திமுக வில் பொறுப்பு போட்டவர்கள் அன்று வைத்த பிளக்ஸ் போர்டு இன்று வரை எடுக்கவில்லை. குறிப்பாக பள்ளப்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம், ராஜாபேட்டை தெரு, திண்டுக்கல் மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்லும் இடமெல்லாம் திமுக போர்டுகள் தான், இதனால் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் சிரமமாக இருக்கும் பிளக்ஸ் போர்டுகள் மீதும், அதை வைத்த திமுக பிரமுகர்களின் மீது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வை படுமா ?? என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்