தினகரன் பிடியில் தேமுதிக… கேட்ட தொகுதிகள் கிடைக்குமா?
வெள்ளி, 12 மார்ச் 2021 (18:13 IST)
தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளில் அமமுக போட்டியிடவுள்ளது. இதனால் தேமுதிகவின் நிலைமை பரிதாபத்தில் உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளில் அமமுக போட்டியிடவுள்ளது. இந்நிலையில் தேமுதிகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தினகரன் தெரிவித்தாலும் அவர்களிடம் மீதி 19 தொகுதிகள் மட்டுமே உள்ளது.
ஏற்கனவே குறைந்த தொகுதிகளைக் கொடுத்த முன்வந்ததால்தான் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில் அமமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்குமா இல்லை தேமுதிக தனித்துப் போடியிடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.