அத்தை தொகுதி சாதகமாக அமையுமா? தீபா அரசியல் வாழ்க்கையின் முதற்படி

வியாழன், 9 மார்ச் 2017 (15:44 IST)
ஆர்.கே. நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் தனது அத்தை தொகுதியில் தீபா போட்டியிடுவாரா என்ற பெரிய எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


 

 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் வரை நடைபெற உள்ளது.
 
ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா ஆகிய இரு அணியினரும் ஆர்.கே நகர் தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சியில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதியில் தனது அரசியில் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவாரா என்று தமிழக மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அப்படி அவர் தேர்தல் களம் கண்டால் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை. ஓ.பி.எஸ். சசிகலா அணியில் இருந்து பிரிந்து வந்த பின் தீபாவிற்கு இருந்த ஆத்ரவு அப்படியே குறைந்தது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை வெறுத்த மக்கள் தீபா ஆதரவு அளித்தனர். ஆனால் தற்போது ஓ.பி.எஸ். அணிக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. 
 
மேலும் தீபா ஆர்.கே. நகரில் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்