ஜுலை 10 அன்று நடந்தது என்ன? வாய் திறப்பாரா பன்னீர் செல்வம்?

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (17:40 IST)
அதிமுகவுடன் தினகரனின் அமமுக இணைந்தால் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால் இரு கட்சிகளையும் இணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளாராம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். 
 
இன்று காலை தினகரன் அளித்த பேட்டி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் கூறியது பின்வருமாறு, துணை முதல்வர் ஓபிஎஸ் என்னை வந்து சந்தித்தது உண்மைதான். அந்த சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு என்னுடன் வருவதாகாவும் அவர் கூறினார்.
 
மேலும் ஒபிஎஸ், ஈபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை, அதனால்தான்  அவர்கள் இருவரும் தங்களுக்கு பின்னே சதித்திட்டம் தீட்டி வைத்துள்ளனர். ஓபிஎஸ் எங்களது ஸ்லீப்பர் செல் இல்லை. எப்படியாவதும் முதலமைச்சர் பதவியை அடைந்து விட துடிக்கிறார் அவர்.
 
அதிமுகவுடன் ஒன்றாக இணைவது தொடர்பாக ஒபிஎஸ் அவரது மகன் ஆகியோர் என்னை அழைத்தனர். அந்த சந்திப்பின் போது தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார் என கூறியுள்ளார். 
 
தினகரன் பேசியது குறித்து ஓபிஎஸ் ஆதரவாலர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஓபிஎஸும் இது குறித்து எதுவும் கூறாது இருந்தார். ஆனால், தற்போது செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூலை 10 இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படும் நிலையில், அன்று என்ன நடந்தது என்றும், தினகரனை சந்தித்தது உண்மைதானா என்றும் கூறுவாரா என எதிர்ப்பார்ப்புகள் உருவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்